மின்சார சபை ஊழியர்களின் விடுமுறை இரத்து

  

Tamil lk News

இலங்கை மின்சார சபையின் அனைத்து ஊழியர்களின் விடுமுறையும் இரத்து செய்யப்பட்டுள்ளது. 


உடன் அமுலாகும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


மறு அறிவித்தல் வரை அவர்களது விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாக அதன் பொது முகாமையாளர் எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளார்.



மின்சார விநியோகத்துடன் தொடர்புடைய அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய பொது சேவைகளாக அறிவிக்கும் ஒரு அசாதாரண வர்த்தமானி அறிவிப்பை ஞாயிற்றுக்கிழமை (21) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வெளியிட்டார்.



மின்சார விநியோகத்தில் ஈடுபட்டுள்ள எந்தவொரு பொது நிறுவனம், அரசுத் துறை, உள்ளூராட்சி அமைப்பு அல்லது கூட்டுறவு சங்கத்தால் வழங்கப்படும் சேவைகள் தடைபடவோ அல்லது குறுக்கிடவோ வாய்ப்புள்ளது.



இதனால் அறிவிப்பு அவசியமாகும் என்று ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்