தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் நேற்று நான்கு நிலஅதிர்வுகள் பதிவாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அதன்படி, வெனிசுவெலாவில் நேற்று 6.3 முதல் 4.9 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.
அந்த நாட்டின் தலைநகர் கராகசுக்கு மேற்கே 600 கிலோமீற்றர் தொலைவில் உள்ள ஜூலியா மாகாணத்தில்
இந்த நிலநடுக்கங்கள் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, வீடுகள், கட்டடங்கள் குலுங்கியதை அடுத்து, பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது.