அதிவேக வீதியில் அதிகாலையில் கோர விபத்து - இருவர் பலி....!!

  

Tamil lk News

மத்திய அதிவேக வீதியில் 91ஆவது கிலோமீட்டர் தூண் அருகில் நடந்த வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதோடு மற்றொருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். 


இன்று (03) அதிகாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 


கோதுமை மா ஏற்றி வந்த லொறியொன்றும் பவுசர் வாகனமொன்றும் மோதிக்கொண்டதிலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.



இவ் விபத்தில் லொறி சாரதி,  உதவியாளர் ஆகிய இருவருமே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



லொறியின் அடிப் பகுதியில் உடல் நசுங்கி உதவியாளர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்