ஓட்டுநர் உரிமங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு....!

  

Tamil lk News

நுகேகொடையில் உள்ள தேசிய மருத்துவ போக்குவரத்து நிறுவனத்திடமிருந்து ஓட்டுநர் உரிமங்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.



இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, ஒரு முன்னோடி திட்டமாக இன்று முதல் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தற்காலிக ஓட்டுநர்

 மேலும் ஓட்டுநர் உரிமத்தில் எந்த மாற்றங்களும் தேவையில்லை என்றால், அந்த நிறுவனத்திடமிருந்து தற்காலிக ஓட்டுநர் உரிமங்களை பெறலாம் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.



 தற்காலிக ஓட்டுநர் உரிம விண்ணப்பதாரர்கள் வெரஹெர மோட்டார் போக்குவரத்து அலுவலகத்திற்கு வருகை தர தேவையில்லை என திணைக்களம் தெரிவித்துள்ளது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்