கிளிநொச்சியில் - வெடிக்காத நிலையில் மீட்கப்பட்ட வெடிகுண்டுகள்!!

 

Tamil lk News

 கிளிநொச்சி(Kilinochchi) - தட்டுவான் கொட்டி பகுதியில் வெடிக்காத நிலையில் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


குறித்த வெடிகுண்டுகள் இன்றையதினம்(30) மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



மேற்குறித்த பகுதியில் நேற்றையதினம்(29) ஒரு வெடிப்பு சம்பவம் இடம்பெற்று இருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



 இந்தநிலையில் தட்டுவான் கொட்டி பகுதி முழுவதும் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.



 இதன்போது வெடிக்காத நிலையில் வெடிகுண்டுகள் காணப்பட்டன.



இந்நிலையில் அதனை மீட்பதற்கு நீதிமன்றத்தின் உத்தரவு பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்