வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவப் பயன்பாட்டில் இருந்த 672 ஏக்கர் அரசாங்கக் காணிகளை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார்.
இன்று (23) பாராளுமன்றத்தில் கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும்போதே இதனைக் குறிப்பிட்டார்.
விடுவிக்கப்பட்ட காணிகளில் 86.24 ஏக்கர் தனியார் காணிகளும் 586 ஏக்கர் இராணுவப் பயன்பாட்டில் இருந்த காணிகளும் அடங்குவதாக கூறப்படுகிறது.
கிழக்கில் மட்டும் 34.58 ஏக்கர் அரசாங்கக் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.



