பாகிஸ்தானில் விபத்து - 15 பேர் உயிரிழப்பு

  

Tamil lk News

பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் இடம்பெற்ற  வீதி விபத்தில் 15 பேர் உயிரிழந்ததுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர்.


 


நேற்று (15) இரவு மலாகண்ட்  மாவட்டத்தில் அதிவேக நெடுஞ்சாலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக மீட்புபணியில் ஈடுபட்ட  அதிகாரிகள் இன்று(16) தெரிவித்தனர்.


 


லொறி  ஒன்று கவிழ்ந்ததில் இந்த விபத்து நிகழ்ந்ததாக மாகாணத்தில் அவசர சேவைகள் துறையின் செய்தித் தொடர்பாளர் பிலால் பைசி தெரிவித்தார்.


 


விபத்து தொடர்பிலான தகவல் கிடைத்தவுடன் மீட்புக் குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நெடுஞ்சாலை பொலிஸார் மற்றும் பிற பணியாளர்களுடன் இணைந்து நடவடிக்கையை மேற்கொண்டதாக பைசி கூறினார்.


 


காயமடைந்தவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதென அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்