கனேமுல்ல சஞ்சீவவைச் சுடுவதற்காக புதுக்கடை நீதிமன்றத்திற்கு நான் வந்த போது, என்னை ஒரு வழக்கறிஞர் என்று நினைத்து ஒரு பெண் ஒரு வழக்கில் வாதாடுவதற்கு என்னிடம் வழக்கை ஒப்படைத்தார்என இஷாரா செவ்வந்தி தெரிவித்துள்ளார்.
சஞ்சீவவின் கொலைக்குப் பின்னணியில் இருந்த மூளையாகக் கருதப்படும் இஷாரா செவ்வந்தி, பொலிஸ் விசாரணையின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கனேமுல்ல சஞ்சீவவைச் சுடுவதற்காக புதுக்கடை நீதிமன்றத்திற்கு கமாண்டோ சாலிந்துவுடன் நான் நீதிமன்றத்திற்கு வந்தேன். வழக்கறிஞர்களுக்காக ஒதுக்கப்பட்ட ஓய்வறையில் இருந்தேன் என்று தெரிவித்தார்.
அங்கு வந்த மிகவும் உதவியற்ற தோற்றமுடைய ஒரு பெண் என்னிடம் பேசினார். நான் ஒரு வழக்கறிஞர் என்று அவர் நினைத்தார்.
அந்தப் பெண்ணின் கணவர் அவளை மோசமாக அடித்தார்,
அந்த நபர் என்னிடம், மேடம், கஷ்டப்பட்டு நான் சம்பாதித்த பணத்தில் ஆயிரம் ரூபாய் மட்டுமே என்னிடம் உள்ளது, இதை எடுத்துக்கொண்டு என் வழக்கைப் பற்றி பேசுவீர்களா? அந்த நேரத்தில் அந்தப் பெண்ணுக்காக நான் மிகவும் பரிதாபப்பட்டேன்.
நான் வேறொரு வழக்கைப் பற்றி பேச வந்திருப்பதாக அவளிடம் சொன்னேன்.
எனவே அங்கிருந்த இன்னுமொரு பெண் சட்டத்தரணியை காட்டி அவரிடம் செல்லுமாறு அந்த பெண்மணியிடம் சொன்னேன்.
அப்படியாக அங்கு சென்ற அந்த பெண்மணி நான் காட்டிய சட்டத்தரணி 2 ஆயிரம் ரூபாவை தருமாறு கோருவதாக என்னிடம் வந்து கூறினார்.
எனது மனம் மேலும் நெகிழ்ந்தது. எனவே அந்த ஏழைப்பெண்மணியை வெளியில் அழைத்துவந்து அவர் கையில் ஐயாயிரம் ரூபா நோட்டை வழங்கினேன். இது துப்பாக்கிச் சூடு நடக்க முதல் இடம்பெற்றது. என செவ்வந்தி வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்நிலையில் இஷாரா செவ்வந்தி உட்பட நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட ஆறு பேரிடம் மேலும் விசாரணைகளை நடத்துவதற்கு தடுப்புக்காவல் உத்தரவுகள் பெறப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நேபாளத்தில் கைது செய்யப்பட்ட, "கணேமுல்ல சஞ்சீவ" கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட சந்தேகநபர்கள் அறுவர் நேற்று மாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.
இதில் இஷாரா செவ்வந்தி, உள்ளிட்ட நால்வர் கொழும்பு குற்ற விசாரணைப்பிரிவிலும் மற்றைய இரு சந்தேகநபர்களும் குற்றப் புலனாய்வு பிரிவின் பேலியகொட பிரிவிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது இவர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்குத் தடுப்புக்காவல் உத்தரவுகள் பெறப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.