ஐந்து வயது மகனை கொலை செய்துவிட்டு தாயும் உயிர்மாய்ப்பு

 

Tamil lk News

 படபொல, கஹடபிட்டிய பகுதியில் இளம் பெண் ஒருவர் தனது குழந்தையை கொலை செய்துவிட்டு தானும் உயிர்மாய்ப்பு செய்துகொண்டுள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது.




படபொல பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய நடத்தப்பட்ட விசாரணையில், குறித்த பெண் மற்றும் சிறுவனின் உடல்கள் அவர்களது வீட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


 உயிரிழந்தவர்களுள் சிறுவனுக்கு மூன்றரை வயது மற்றும் பெண்ணுக்கு 24 வயது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை படபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்