இந்தியாவின்(India) மகாராஷ்டிரா மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 3.9 ஆக பதிவான நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பிற்பகல் 03:30 மணியளவில் 05 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
எனினும், இந்த நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் நவம்பர் 05 ஆம் திகதி இலங்கையின் முழு கடற்பகுதியிலும் சுனாமி தயார்நிலை திட்டம் மேற்கொள்ளப்படும் என இடர்காப்பு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.



