வட்ஸ் அப் மோசடிகள் - பொதுமக்களுக்கு பொலிஸாரின் எச்சரிக்கை

  

Tamil lk News

வட்ஸ் அப், டெலிகிராம் போன்ற சமூக ஊடகக் குழுக்கள் மூலம் இணைய வழி நிதி மோசடிகள் நடைபெறுவதாகவும் இது தொடர்பில் தினமும் முறைப்பாடுகள் பதிவாகுவதாகவும் இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.




எனவே சமூக ஊடகக் கணக்குகள் மூலம் பல்வேறு வருமான ஆதாரங்களை வழங்குவதாகக் கூறி அறிமுகமற்ற நபர்கள் மற்றும் சமூக ஊடகக் குழுக்கள் செய்யும் மோசடி தூண்டுதல்களுக்கு ஏமாற வேண்டாம் எனவும் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.




மேலும் வங்கி கணக்கு இலக்கங்கள், கடவுச் சொற்கள் உள்ளிட்டவற்றை வெளியாட்களுக்கு வழங்குவதைத் தவிர்க்குமாறும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்