பொலிஸாரின் நிறுத்த உத்தரவை மீறி பயணித்த காரின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு

  

Tamil lk News

மாத்தறையில் நேற்று (07) இரவு பொலிஸாரின் நிறுத்த உத்தரவை மீறி பயணித்த காரின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். 




மாத்தறை வெல்லமடம பகுதியில் பொலிஸாரின் சைகையை மீறி குறித்த வாகனம் பயணித்துள்ளது.




இந்நிலையில் பொலிஸார் காரை நோக்கி பல தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்திய நிலையில், மாத்தறை, ஜனராஜா மாவத்தையில் கைவிடப்ப்ட நிலையில் கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 




குறித்த காரில் இருவர் பயணித்திருந்த நிலையில் இருவரும் தப்பிச் சென்றுள்ளனர். 




காரின் உரிமையாளர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்