உயிருடன் வாழும் பெண்ணுக்கு வழங்கப்பட்ட இறப்புச் சான்றிதழ்

 

Tamil lk News

 

மாத்தறையில் உயிருடன் இருக்கும் போதே இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டதால், அடிப்படை சலுகைகள் கூட பெற முடியாத நிலையில் பெண் ஒருவர் உள்ளமை தெரிய வந்துள்ளது.


அதுரலியவில் வசிக்கும் பேபிஹாமி என்ற பெண், கையில் இறப்புச் சான்றிதழுடன் பல நெருக்கடிகளுடன் வாழ்ந்து வருகிறார்.



வேணகம கிராம சேவையாளர் பிரிவின் மலுவாரால, அளுத்ஹேன என்ற கிராமத்தில் குறித்த பெண் வாழ்ந்து வருகின்றார்.



 63 வயதுடைய குறித்த பெண்ணின் இரண்டு பிள்ளைகள் திருமணமான பின்னர் சிறிய வீட்டில் தனியாக வசிக்கிறார்.


 சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இறந்த அவரது அத்தை, கலுஹலமுல்லவின் பேபிஹாமியின் பெயரில் வழங்கப்பட வேண்டிய இறப்புச் சான்றிதழ் குறித்த பெண்ணின் பெயரில் வழங்கப்பட்டுள்ளது.



எனினும் உயிருடன் இருக்கும் பேபிஹாமி பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.


இதனால் இந்த பெண் எந்த வசதியோ அல்லது பிற அரசாங்க சலுகைகளோ இல்லாமல் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்