மின்கட்டணத்தில் மாற்றமில்லை; பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அதிரடி அறிவிப்பு!

  

Tamil lk News

மின்சார கட்டணத்தில் எந்தவித மாற்றங்களும் மேற்கொள்ளப்படமாட்டாது என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.




கொழும்பில் இடம்பெறும் விசேட செய்தியாளர் சந்திப்பில் அந்த ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் கே.எல்.சந்திரலால் இதனை அறிவித்தார்.




முன்னதாக, 6.8 சதவீதத்தினால் மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் என இலங்கை மின்சார சபை, இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு முன்மொழிவுகளை முன்வைத்திருந்தது.




இது தொடர்பில், தொடர்புடைய தரப்பினர்களிடம் அந்த ஆணைக்குழு கருத்துகளையும் ஆலோசனைகளையும் கோரியிருந்தன.




அவற்றை பரிசீலித்ததையடுத்து, மின்சார கட்டணத்தில் எந்தவித மாற்றத்தையும் மேற்கொள்ளாது எதிர்வரும் 3 மாதங்களுக்கு தற்போதைய கட்டணத்தையே பேணிச் செல்வதற்கு ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்