கியூபாவை நோக்கி நகரும் மெலிசா புயல்

  

Tamil lk News

மெலிசா புயல் ஜமைக்காவை தாக்கிய பின்னர், தற்போது கியூபாவை நோக்கி நகர்வதாக சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன.


இது நவீன வரலாற்றில் கரீபியன் தேசத்தை இதுவரை தாக்காத வலுவான புயலாக கருதப்படுகின்றது.


முன்னதாக 5 ஆம் வகையின் 185 மைல் வேகத்தில் காற்று வீசிய பின்னர், மணிக்கு 125 கிலோமீற்றர் வேகத்துடன் மூன்றாம் வகைக்கு வலுவிழந்துள்ளது.



 இந்த புயல் காரணமாக ஜமைக்காவின் சில பகுதிகளில் 76 சென்றிமீற்றர் வரை மழை பெய்யக்கூடும், அத்துடன் சில பகுதிகள் திடீர் வெள்ளப்பெருக்கை எதிர்கொள்கின்றன.



இந்த நிலையில், முன்னதாகவே இந்த புயல் குறித்த எச்சரிக்கையை அடுத்து, பாதுகாப்பற்ற இடங்களில் இருந்தோர், பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டனர் என்றும் ஜமைக்கா தகவல்கள் கூறுகின்றன.



இதேவேளை இந்த புயலின் தாக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை என கூறப்படுகின்றது.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்