அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கென்டக்கியில் உள்ள லூயிஸ்வில் முஹம்மது அலி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, UPS நிறுவனத்திற்குச் சொந்தமான மெக்டொனல் டக்ளஸ் MD-11 ரகத்தைச் சேர்ந்த UPS 2976 என்ற சரக்கு விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.
இந்த சரக்கு விமானம் வெடித்துச் சிதறியதில் 7 பேர் உயிரிழந்த நிலையில், 11 பேர் காயமடைந்தனர்.
இந்த விபத்தையடுத்து அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில் அவசரநிலை பிரகடனப்படத்தப்பட்டுள்ளது.



