திருகோணமலையில் - தீப்பற்றி நாசமாகிய கண் பரிசோதனைக் கூடம்

  

Tamil lk News

 திருகோணமலை (Trincomalee) பொது வைத்தியசாலையின் அருகாமையில் உள்ள தனியார் கண் பரிசோதனை தீப்பற்றி நாசமாகியுள்ளது. 



குறித்த சம்பவம் இன்று(06) மாலை இடம்பெற்றுள்ளது. 



மின் ஒழுக்கு காரணமாக  பரிசோதனைக் கூடத்தில் தீப்பற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 




பரிசோதனைக்கூடத்தில் தீப்பற்றியதால்  பரிசோதனை நிலையத்தின் மேல் மாடி பகுதியில் தங்கியிருந்த தாதியர்களின் விடுதி அறையும் தீப்பற்றி நாசமாகியுள்ளது. 



தீ விபத்தையடுத்து விரைந்த செயற்பட்ட தீயணைப்புப் பிரிவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். 



தீ விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. எனினும் பரிசோதனைக் கூடத்திலிருந்த பல உபகரணங்கள் சாம்பலகாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை துறைமுக பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.



புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்