இந்தோனேசியாவில் - மத வழிபாட்டுத் தலத்தில் குண்டு வெடிப்பு

  

Tamil lk News

இந்தோனேசியாவில் இன்று மத வழிபாட்டுத் தலத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் 50க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

 

இந்தோனேசியா தலைநகர் ஜகார்தாவில் கலபா கார்டிங் பகுதி உள்ள இஸ்லாமிய மத வழிபாட்டுத் தலத்தில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது. 

 


மேலும் இச்சம்பவம் அருகில் இருந்த பாடசாலையிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதன்போது பாடசாலை மாணவர்கள் 20 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுகின்றது. 

 


குறித்த சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

 


சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்