கம்பளையிலிருந்து அனுராதபுரம் நோக்கி பக்தர்கள் குழுவை ஏற்றிச் சென்ற சொகுசு பேருந்தொன்று இன்று காலை கல்குளம் பிரதேசத்தில் வைத்து தீப்பற்றி எரிந்துள்ளது.
கண்டி-யாழ்ப்பாணம் A9 வீதியில் உள்ள கல்குளம் கட்டுமான இயந்திர கல்லூரிக்கு முன்னால் குறித்த பேருந்து தீப்பிடித்து எரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்து ஏற்பட்டபோது பேருந்தில் சாரதி மற்றும் உதவியாளர் உட்பட சுமார் 12 பேர் இருந்ததாகவும், அவர்களில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீயை அணைக்கும் பணி.,..
இருப்பினும், தீ விபத்தில் பேருந்து பலத்த சேதமடைந்துள்ளதுடன், சாரதியும், உதவியாளரும் பேருந்தை நிறுத்தி பயணிகளை பாதுகாப்பாக இறக்கியுள்ளனர்.
பக்தர்களின் அலறல் சத்தம் கேட்டு பகுதிவாசிகளும், பொலிஸாரும் இணைந்து பேருந்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இருப்பினும், பேருந்தில் இருந்த பயணிகளின் பொருட்கள் மற்றும் உடமைகள் தீயில் எரிந்து நாசமாகிவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பேருந்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.