20-ம் நூற்றாண்டின் முதல் பாதியில் உலக நாடுகளை அச்சுறுத்திய நோயாக போலியோ நோய் காணப்பட்டது.
‘போலியோ’ என்று அழைக்கப்படும் ‘போலியோமைலிடிஸ்’ நோயானது , குறிப்பாக 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அதிகமாக பாதிக்கின்றது.
இது பெரும்பாலும் அறிகுறியற்றது, ஆனால் காய்ச்சல், வாந்தி போன்றவை ஏற்படலாம்.
போலியோவைரஸ் கிருமியில் 2 ரகங்கள் உள்ளன.
முதலாம் வகை அரிதானது. இந்த வைரஸ் தற்போது ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் மட்டுமே காணப்படுகிறது.
இரண்டாவது ரகம் பொதுவாக காணப்படும் போலியோ பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது.
ஆனால் அதுவும் தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் கழிவுநீர் மாதிரியில் முதல்முறை போலியோ வைரஸின் 1ஆம் வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை.
எனினும், முறையான தடுப்பூசி செலுத்தாத நபர்களுக்கு போலியோ பாதிப்பு ஏற்படக்கூடும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



