மாவீரர் நாளை முன்னிட்டு வவுனியா- ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணிகள் இன்று (11) முன்னெடுக்கப்பட்டது.
ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லமானது இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நிலையில் கடந்த காலங்களைப் போல் அதற்கு அருகில் உள்ள இடத்தில் மாவீரர் தின ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஏற்பாட்டுக் குழுவினர் குறித்த பகுதியில் மாவீரர் நினைவாக தீபம் ஏற்றி துப்பரவு பணிகளை ஆரம்பித்தனர்.
இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வவுனியா மாவடட அமைப்பாளர் எஸ்.தவபாலன் உட்பட்ட ஏற்பாட்டு குழுவினர், இளைஞர், யுவதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.



