வெள்ளத்தில் சிக்கி அல்லலுறும் யானைகள் கூட்டம்; தங்குமிடம் தேடி அலையும் காட்சி!!

 

Tamil lk News

 காட்டுக்குள் வெள்ளத்தில் சிக்கி தங்குமிடம் தேடி யானைகள் கூட்டம் அங்குமிங்கும் அலைந்து திரிகின்றன. 



இந்த அவலநிலை மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. நாட்டில் ஏற்பட்ட புயலின் கோரம் மக்களை மட்டுமன்றி அனைத்து உயிரினங்களையும் தாக்கியுள்ளது. 



புயலால் அதிகரித்த வெள்ளப்பெருக்கினால் மக்கள் தத்தளித்துக் கொண்டிருக்கும் மறுபுறம் யானைகளும் ஆங்காங்கே தத்தளித்துள்ளன. 




மட்டக்களப்பு - செங்கலடி கறுத்த பாலத்திற்கு அருகில் உள்ள பிரதேசத்தில்  அதிகரித்த வெள்ளப்பெருக்கினால் காடுகள் முழுவதும் வெள்ளத்தால் மூழ்கியுள்ளது. 




இதனால்  வன விலங்குகளும் பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்குகின்றன.வெள்ளத்தில் நடந்து திரிய முடியாமலும் தங்குவதற்கு இடமில்லாமலும் அலைகின்றன. 




அதுமட்டுமன்றி உணவின்மையினால் மனித குடியிருப்புகள் நோக்கிப் படையெடுக்கும் நிலையும் உருவாகியுள்ளது. 




புயல் கடந்தும் வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் முயற்சியில் அரசாங்கம் தீவிரமாக செயற்பட்டு வரும் நிலையில் தற்போது வனவிலங்குகளையும் மீட்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்