இன்று செவ்வாய்க்கிழமை (02) மட்டுப்படுத்தப்பட்ட வகையில் ரயில் சேவைகள் இயங்கும் என ரயில் திணைக்களம் அறிவித்துள்ளது.
பிரதான மார்க்கத்தில் ரயில் சேவைகள் அம்பேபுஸ்ஸ வரை மட்டுமே இயங்கும் என ரயில் திணைக்களம் அறிவித்துள்ளது.
புத்தளம் மார்க்கத்தில் ரயில் சேவைகள் கொச்சிக்கடை வரை மட்டுமே இருக்கும் எனவும், களனி வெளி மற்றும் கரையோர மார்க்கங்களில் சேவைகள் வழக்கம் போல் இயங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது நிலவும் சீரற்ற வானிலையினால் பொல்கஹவெல, ரம்புக்கனை, குருநாகல், கனேவத்த, சிலாபம் மற்றும் புத்தளம் ஆகிய இடங்களுக்குச் செல்ல முடியாததால் பிரதான மற்றும் புத்தளம் மார்க்கங்களில் 18 ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை இல்லை என வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
பேரிடர் சூழ்நிலை காரணமாக அடைய முடியாத பகுதிகளுக்கு பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் தீவு முழுவதும் அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.



