சங்ககால தமிழர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகள்
சங்க காலத்தில் தமிழரின் அறிவியல் அறிவு எப்படி வந்திருக்கும்
இந்த உலகில் மூத்த மொழி தமிழ் மொழி என்று உலகமே இப்போது அங்கீகரித்து வருகிறது அந்தவகையில் இந்த மொழி எப்படி தோன்றியது யார் தமிழை உருவாக்கினார்கள் என்ற கேள்விக்கு இதுவரைக்கும் யாருக்குமே விடை தெரியாது. அப்படித் தெரிந்தாலும் சங்க காலத்தில் உள்ள புலவர்கள் தான் தமிழை உருவாக்கினார்கள் என்று சொன்னாலும் அந்தப் புலவர்களுக்கும் தமிழில் கற்றுக்கொடுக்க ஒரு குருவானவர் இருந்திருப்பார் அவர் வழியாக புலவர்கள் கற்றுக்கொண்டு இருப்பார்கள் அந்த குருவுக்கும் மேலான ஒரு குரு இருக்க வேண்டும். இப்படியே சொல்லப்போனால் ஆதி வரை சென்றால் கூட தமிழை கற்றுக்கொடுத்தது யாரென்று தேடி பார்ப்பது மிகவும் கடினமானது ஒன்று தான்.
சங்க காலத்தில் உள்ள புலவர்கள் விண்வெளியைப் பற்றி பல அரிய தகவல்களை பாடல் வழியாக சொல்லி உள்ளார்கள் இந்த அறிவாற்றல் எப்படி அவர்களுக்குக் கிடைத்திருக்கும். எந்தவிதமான தொழில்நுட்பங்களை தெரியாத அந்தக் காலத்தில் எப்படி மிகத்துல்லியமாக இவர்கள் கணித்து இருக்க முடியும் இப்போது நவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட தொலைநோக்கி மூலமாக கூட சரியாக வேறு கிரகங்களை பார்க்க முடியாத நிலையில் இருக்கும்போது எப்படி சங்க காலத்தில் உள்ள புலவர்கள் கோள்கள் எல்லாத்தையும் சரியாக கண்டுபிடித்து அவை அனைத்தும் 9 நவகிரகங்கள் ஆக கணித்தார்கள் என்பதை சற்று ஆழமாக சிந்தித்து பார்த்தால் உண்மையில் சங்க காலத்திலிருந்தே தமிழர்களின் அறிவாற்றலை நினைத்து வியப்படைய தான் வேண்டும். அந்தளவு அறிவாற்றலையும் பாடல் வழியாக ஓலைச்சுவடிகளில் பதிவு செய்து விட்டு சென்றுள்ளார்கள் இவை அனைத்தும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தங்களின் அறிவாற்றல் மூலமாக கண்டுபிடித்து விட்டார்கள் என்றால் உண்மையிலே முதல் விஞ்ஞானி தமிழன் தான் என்று நாங்கள் பெருமையாக சொல்லிக் கொள்ளலாம்.
ஏன் தமிழனின் கண்டுபிடிப்பு அக்காலத்தில் அங்கீகரிக்கப்படவில்லை
சங்க காலத்தில் தமிழர்கள் தங்களுடைய அறிவாற்றல் மூலமாக பல தகவல்களை ஓலைச்சுவடிகள் மூலமாக பதிவேற்றி சென்று உள்ளார்கள். ஆனால் அந்த ஓலைச் சுவடிகள் அனைத்தும் பாதுகாத்தது மாத்திரம் ஆகத்தான் நாங்கள் இருந்து வருகிறோம். அதை உலகுக்கு சரியான முறையில் உலகுக்கு வெளிப்படுத்த இல்லை என்பதுதான் என்னால் கூற முடியும். ஏனென்றால் ஆங்கிலேயர்கள் தங்களுடைய கண்டுபிடிப்பை எப்படியாவது சிரமப்பட்டு அதற்கான காப்புரிமையை பெற்றுவிடுவார்கள் இதனால் இவர்களுடைய கண்டுபிடிப்பு உலகுக்கு வெளிப்படுத்தப்படுகிறது. அதை தொடர்ந்து அந்த கண்டுபிடிப்பை மேலும் வலுப்படுத்தி அதிலிருந்து பல நுட்பங்களை கையாண்டு வெற்றியைக் கண்டு வருகிறார்கள்.
ஆனால் தமிழன் தன்னுடைய கண்டுபிடிப்புகளை தனக்குள்ளே வைத்துக்கொள்வதால் அது உலகுக்குத் தெரிய வருவதில்லை தமிழனுக்கு தமிழனே எதிரியாக இருக்கும்போது எப்படி தன்னுடைய படைப்புகளை உலகுக்கு வெளிப்படுத்த முடியும். அதாவது ஒருவருடைய படைப்புக்கள் மிகவும் திறமையாக இருந்தால் அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் ஏனென்றால் என்னை விட இவன் மேலாதிக்கம் பெற்று விடுவான் இதனால் இவருடைய படைப்புகள் அனைத்தையும் எப்படியாவது முடக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே இருப்பதால் தானும் முன்னேற மாட்டான் மற்றவரையும் முன்னேற விட மாட்டான் இதை பயன்படுத்திக்கொண்டு ஆங்கிலேயர்கள் தான் இந்த உலகை பல கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து உலகில் தலைசிறந்து இருக்கிறார்கள்.
தமிழன் தான் ஆதியில் எல்லாம் கண்டுபிடித்தான் என்று பெருமையாக மார்பில் தட்டி கொள்வதில் எந்த பயனும் இல்லை சரியான நேரத்தில் அந்த கண்டுபிடிப்புகளை உலகுக்கு பயன்படுத்த வைப்பதுதான் உண்மையான பெருமையாக இருக்கும் தமிழனுக்கு. அதை விட்டுவிட்டு எங்கள் கண்டுபிடிப்புகளை தான் அவர்கள் பயன்படுத்தி இப்போது உலகில் சாதனை படைத்து வருகிறார்கள் என்று குறை கூறுவதில் எந்த பயனும் இல்லை உலகம் என்பது அதிக வேகமாக செல்கிறது அதற்கேற்றவாறு நாங்களும் உலகுக்கு ஈடுகொடுத்து எங்களுடைய கண்டுபிடிப்புகளை உலகுக்கு பயன்படுத்த வேண்டும். அந்தவகையில் ஆங்கிலேயர்கள் தங்களுடைய கண்டுபிடிப்புகளை மேலும் புதிய நவீன தொழில்நுட்பங்களை கையாண்டு முன்னேறி சென்று வருகிறார்கள் அவர்களின் கண்டுபிடிப்பின் மூலமாக தான் இப்போது பாதி உலகமே இயங்கிக் கொண்டு இருக்கிறது என்பது இங்கு காணக்கூடியதாக இருக்கிறது.
சங்க காலத்தில் தமிழர்கள் எங்களுக்காக விட்டுச் சென்ற அறிவியல் தகவல்களை கொண்ட பல ஓலைச் சுவடிகளைப் பாதுகாத்து வைப்பதில் எந்த பயனும் இல்லை அதை உலகுக்கு வெளிக்கொண்டு அவை அனைத்தையும் உலகுக்கு மீண்டும் பயன்படுத்தும் வகையில் கொண்டுவருவதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். தமிழர்களுக்கான தமிழ் இலக்கிய விழாக்கள் மற்றும் தமிழர்களில் நடத்தப்படும் பல நிகழ்வுகள் அனைத்தையும் மேடை போட்டு மிக சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள் அத்தருணத்தில் மட்டும் தமிழனுடைய பெருமையை மிகவும் ஆர்வத்துடனும் மேடையில் பேசிவிட்டு மேடையை விட்டு இறங்கி போனதும் அல்லது அந்த அரங்கில் இருந்து அனைவருமே சென்று விட்டதும் இந்த பேச்சுக்கள் அனைத்தும் வார்த்தைகளும் காற்றோடு கலந்து போய்விடும். மீண்டும் அடுத்த ஆண்டு இதையே செய்வார்கள் இப்படி செய்து கொண்டிருப்பது மாத்திரமே தமிழனின் வேலையாக இப்போது இருந்து வருகிறது.
இனியாவது ஒவ்வொரு தமிழனுக்கும் சங்க காலத்தில் இருக்கும் ஓலைச்சுவடியில் உள்ள தமிழனின் அறிவியல் ஆற்றல் எப்படி இருந்தது என்பதையும் அதை வைத்துக்கொண்டு இன்னும் நாங்கள் எப்படி மேலும் எங்களுடைய அறிவாற்றலை வளர்த்துக்கொண்டு நாங்களும் இந்த உலகில் ஏதாவது ஒன்றை கண்டுபிடிப்புகளும் அல்லது உற்பத்திகளை உருவாக்க முடியும் ஆர்வத்துடன் முன்வர வேண்டும். ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள் வருங்கால சந்ததிகள் அவர்கள் மேலும் வலுப்படுத்தி அவர்களும் அறிவியல் துறையில் சிறந்து விளங்குவதற்காக ஒரு வழியாகவும் இது இருக்கும். என்பதை கூறிக்கொண்டு இந்த பதிவின் நிறைவு பகுதியை வந்த அடைகின்றேன். சங்க காலத்தின் தமிழர்களின் அறிவியல் ஆற்றலை முடிந்தவரை உலகுக்கு வெளிப்படுத்தி அதன் மூலமாக புதிய கண்டுபிடிப்புகளையும் உருவாக்கி வருங்கால தமிழர்களின் சந்ததிகளை அறிவியல் துறையில் மேலும் ஊக்குவிப்பதற்கான முயற்சிகளை எடுப்போம் என்பதை இப்போதே உறுதி செய்து கொள்ளுங்கள் இல்லை என்றால் எங்களுடைய சங்ககால தமிழருடைய அறிவியல் அனைத்தும் அடையாளம் தெரியாமல் நிலைமைக்கு உருவாகிவிடும்.
நண்பர்களே இந்த பதிவை பற்றி உங்களுடைய கருத்துக்கள் என்னவாக இருக்கும் என்பதை அறிந்து கொள்வதற்கு எங்கள் இணையதளம் மிக எதிர்பார்ப்புடன் இருப்பதால் உங்களுடைய கருத்துக்களை பதிவு செய்வதன் மூலமாக எங்களுடைய தகவல்கள் அனைத்தும் உங்களுக்கு பயன் தரும் வகையில் இருக்கும் என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடியும் ஆகையால் இந்த பதிவை பார்த்த பின்பு உங்களுடைய கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.