பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் புலமைப்பரிசில் பரீட்சைகள் தொடர்பான புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
நடைபெற இருக்கும் புலமைப்பரிசில் பரீட்சைக்கான மாணவர்களுக்கு பரீட்சை அனுமதி அட்டை வழங்கப்பட மாட்டாது. இதற்கு அமைய புதிய நடைமுறையாக பரீட்சைக்கு தோற்ற உள்ளவர்களின் வருகையை பதிவுகளை மேற்கொள்ளும் முறைமை ஒன்றை செயல்படுத்த உள்ளதாகவும் பரீட்சை அனுமதி அட்டைக்கு பதிலாக இந்த முறைமையை மேற்கொள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 18ம் திகதி இந்த வருடத்திற்கான ஐந்தாம் தரம் புலமைப்பரிசில் பரீட்சை நடைபெற உள்ளதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.