மனிதனின் அறிவாற்றலும் நவீன தொழில்நுட்பங்களும்

 மனிதனின் அறிவியல் ஆற்றலால் உருவாக்கப்பட்ட இயந்திரங்களால் மனிதனின் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது



அறிவியலின் ஆற்றல் மூலமாக நாளுக்குநாள் புதிய தொழில்நுட்பங்கள் உருவாகிக் கொண்டுதான் வருகிறது அந்த வகையில் இப்போது மனித இனம் இயந்திரங்கள் ஒன்று இல்லாமல் இயங்க முடியாத நிலைமைக்கு  மாறிக் கொண்டு வருகிறார்கள் என்பதை இங்கு அதிகமாக காணக்கூடியதாக இருக்கிறது. இதனால் காலப்போக்கில் மனிதனுடைய உழைப்பு என்பது இல்லாமல் போகும் அளவுக்கு இயந்திரங்கள் உருவாகி வந்து கொண்டிருக்கிறது. இதனால் மனிதனுடைய எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது இனி மனிதன் இயந்திரங்களுடன் இணைந்து தான் வாழ வேண்டுமா என்ற சிறிய கட்டுரையை இந்த பதிவில் தொடர்ந்து பார்ப்போம் இதன் மூலமாக மனிதனுடைய எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது. என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில் இந்த பதிவை தொடர்கின்றேன்.

உற்பத்தி நிறுவனங்களில் இயந்திரங்களின் உருவாக்கத்தான் மனித உழைப்பு பின்னடையும் நிலைமைகள் உருவாகும்

தொழிற்சாலைகளிலும் மனிதன் செய்ய வேண்டிய வேலைகள் அனைத்தையும் இயந்திரங்களைக் கொண்டு செய்து முடிக்கும் அளவுக்கு தொழில்நுட்பங்கள் வளர்ந்து விட்டதால் மனிதனுடைய உழைப்பு மிகவும் பின்னடைவு நிலைக்கு தள்ளப்படுவதை காணக் கூடியதாக இருக்கிறது. புதிய தொழில்நுட்பங்கள் உருவாகும்போது உலகில் பல மாற்றங்கள் உருவாகிக் கொண்டு வருவதால் நன்மைகளும் இருக்கத்தான் செய்கிறது. இருந்தாலும் மனித இனத்தின் உழைப்புக்கு குந்தகம் விளைவிக்கும் அளவுக்கு தொழில்நுட்பங்கள் உருவாகுவதால் மனிதனுடைய எதிர்காலம் பின்னடைவை நோக்கிச் செல்வதற்கான வழிகளும் அதிகமாக காணப்படுவதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது.

இப்போது கொரோனா மூலமாக பல நிறுவனங்களில் மனிதனை வைத்து வேலை செய்ய முடியாத நிலைக்கு பல நிறுவனங்கள் நெருக்கடியை சந்தித்து வருவதால் இனி இதற்காக மனிதன் செய்யக்கூடிய வேலைகள் அனைத்தையும் ரோபோ இயந்திரங்களை வைத்து செய்ய தொடங்க முன்வந்தார்கள் என்றால் மனிதனுடைய உழைப்பு என்பது நிறுவனங்களுக்கு தேவைப்படாத ஒன்றாக மாறிவிடும். ஏனென்றால் இயந்திரங்களுக்கு ஊதியம் தேவையில்லை அதற்கான பராமரிப்பு செலவு மாத்திரம் தான் இருக்கும் இதனால் பல நிறுவனங்கள் லாபம் பெறுவதற்கு கூடியவகையில் இருந்துவிட்டால் மனிதர்களுடைய உழைப்பை இனி எந்த நிறுவனமும் தேடி போகத் தேவையில்லை என்ற நிலைக்கு மாறிவிடும் ஏனென்றால் அந்த அளவுக்கு நவீன தொழில் நுட்பங்களை உருவாக்கும் அறிவாற்றலை போதிய அளவில் இந்த உலகத்தில் இருப்பதால் நிறுவனங்களுக்கு தேவையான ரோபோ இயந்திரங்களை உருவாக்க முடியும். இதனால் இனிவரும் காலங்களில் மனிதர்களின் உடல் உழைப்பு தேவை இல்லாமல் ரோபோ இயந்திரங்களை வைத்து வேலைகளை செய்யவும் அதன் மூலமாக நிறைய லாபத்தை பெறமடியும் என்ற எண்ணத்தில் பல நிறுவனங்கள் இவ்வாறான முயற்சியில் செயல்படத் தொடங்கிவிடுவார்கள்.

அப்படியும் மனிதர்கள் ஒரு நிறுவனத்திற்கு தேவை என்றால் அது ஒரு இயந்திரத்தை பராமரிப்பதற்கும் அதனுடைய தொழில்நுட்பங்களை மேலும் அதிகரிக்கும் திட்டங்களை வகுக்கும் அளவுக்கான உத்திகளை கொண்டவர்களைத் தான் பயன்படுத்துவார்கள். ஆகையால் எதிர்வரும் காலங்களில் மனித இனம் இயந்திரங்கள் மூலமாக தான் வாழ வேண்டிய நிலமைக்கு தள்ளப்பட்டு விடுவார்கள். என்பதால் இனி எதிர்வரும் சந்ததிகள் தாங்கள் இந்த உலகில் நிலைத்திருக்க வேண்டுமென்றால் நவீன தொழில்நுட்பங்களை கையாளும் நவீன நுட்பங்களை கற்றுக்கொள்ள வேண்டிய நிலைக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த உலகம் காலத்திற்கு ஏற்றவாறு தொழில்நுட்பங்களை மாற்றிக்கொண்டே இருக்கும் அதுக்கு ஏற்றவாறு மனித இனம் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டிய நிலைக்கும் தள்ளப்படுவதால் இனி மனித இனம் எதிர்காலத்தில் இயந்திரங்களோடு ஒன்றிணைந்து வாழ வேண்டுமென்றால் நவீன தொழில் நுட்பங்களை நன்கு அறிந்து கொள்ள வேண்டும்  அதனுடைய அறிவாற்றலை மேலும் வளர்த்துக் கொள்வதன் மூலமாக தான். இந்த உலகில் நவீன தொழில்நுட்பங்களுடன் போட்டி போட்டுக்கண்டு தங்கள் வாழ்க்கையை கொண்டு செல்ல முடியும்.

எதிர்காலத்தில் வரவிருக்கும் நவீன தொழில்நுட்பங்கள்

இன்னும் ஐம்பது வருடங்களுக்குப் பின்பு இந்த உலகம் பல அதிநவீன தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கான திட்டங்களை இப்போதே போட்டுவிட்டார்கள். அதாவது சாரதி இல்லாமல் இயங்கும் கார் மற்றும் ஆகாயத்தில் பறக்கும் கார் வீட்டுவேலைகளை செய்வதற்கான ரோபோக்கள் என பல தொழில்நுட்பங்களை உருவாக்க திட்டம் போட்டு விட்டார்கள் ஆகையால் மனித இனம் இனி இயந்திரங்களுடன் தான் எதிர்காலத்தில் வாழ வேண்டிய நிலைக்கு தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.

இதனால் இயந்திரங்களை குறை சொல்வதில் எந்த பயனும் இல்லை ஏனென்றால் ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வேலைகளை இலகுவாக செய்வதற்காக இயந்திரங்களை நாடும்போது மனிதன் உடல் உழைப்பு இல்லாமல் சோம்பல் நிலைக்கு தள்ளப்பட்டு பல நோய்களை தனக்குள் உருவாக்கிக் கொள்கின்றான் என்று சொன்னாலும் கூட மனிதர்கள் இயந்திரங்களை பயன்படுத்தி நிறைய பயன்களை பெற்றுக் கொள்வதால் இயந்திரங்கள் வந்து விட்டதால் மனித இனம் பின்னடைவை நோக்கிச் செல்கின்றது என்றும் சொல்ல முடியாது. ஆதிகாலத்தில் மனிதன் தன்னுடைய உடல் உழைப்பின் மூலமாக அதிகமான வேலைகளை செய்து வந்துகொண்டிருந்தார்கள் காலப்போக்கில் இயந்திரங்கள் உருவாகி வரும் பொழுது இயந்திரங்களை பயன்படுத்தி வேலைகளை செய்ய தொடங்கியதும் மனிதனுடைய உடல் உழைப்பும் நாளுக்குநாள் பின்னோக்கி செல்லும் போது மனிதனின் உடல் கடுமையான வேலைகளை செய்வதற்கு ஒத்துழைக்காத நிலைக்கு மாறிவிடுகிறது. இதனால் மனிதன் இலகுவாக செய்யக்கூடிய வேலைகள் அனைத்தையும் இயந்திரங்களை பயன்படுத்தி செய்ய தொடங்கி விட்டார்கள்.

இனி எதிர்வரும் காலங்களில் இயந்திரங்கள் தான் மனிதனை ஆளப்போகும் என்ற நிலை உருவாகி விடும் ஆகையால் மனித இனம் இனி எதிர்காலத்தை எப்படி சமாளிக்கப் போகிறார்கள் இயந்திரங்களோடு என்று சற்று சிந்தித்துப் பாருங்கள் ஆகையால் இயந்திரங்களோடு வாழ்வதற்கு நாங்கள் எங்களைத் தயார்படுத்திக் கொள்வதற்கு அதற்கேற்றவாறு கல்வி அறிவையும் அறிவியலையும் நன்கு அறிந்து கொள்ள வேண்டும் இல்லையென்றால் எதிர்காலத்தில் இயந்திரங்களோடு ஒன்றிணைந்து வாழ்வது மிகவும் கடினமான நிலைக்கு தள்ளப்படுவோம் என்பதை கூறிக்கொண்டு இந்த பதிவினை நிறைவு பகுதி வந்த அடைகின்றோம். இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயன் தரும் வகையில் இருந்திருக்கும் என்று நினைக்கின்றேன் இதே போன்று மீண்டும் ஒரு அறிவியல் பதிவு உங்களை நாடி வருகின்றோம் என்பதை தெரிவித்துக்கண்டு இந்த பதிவைப் பற்றி உங்களுடைய கருத்துக்களையும் எங்கள் இணையதளம் வரவேற்கின்றது.

இதுவரைக்கும் எங்கள் இணையதளத்தின் பதிவுகளை பெருமையுடன் பார்த்தா உங்களுக்கு எங்களுடைய நன்றிகள்.



Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்