25 ஆம் திகதி இலங்கையில் ஏற்படும் மாற்றம் வானிலை தொடர்பான வெளியான எச்சரிக்கை!



தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் கடற்பரப்புகளுக்கு மேலாக நிலைக்கொண்டிருக்கும் ஒரு குறைந்த தாழமுக்கம் வலுவடைந்து திருகோணமலைக்கு வடகிழக்காக 420 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது.

டிசம்பர் 24, 25 இலங்கையை கடக்க கூடிய சாத்தியம் காணப்படுகிறது இந்த நிலையில் கடலில் பயணம் செய்யும் மீனவர்களுக்காக எச்சரிக்கை விடுத்தப்பட்டுள்ளது மன்னாரில் இருந்து காங்கேசன் துறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையிலான தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பரப்புகளிலும் மறு அறிவித்தல் வரை எந்தவிதமான நடவடிக்கைகளிலும் ஈடுபட தவித்துக் கொள்ளுமாறு அறிவித்துள்ளனர்.

அதேபோன்று கடலில் பயணம் செய்யும் மீனவ சமூகங்கள் வளிமண்டலவியால் திணைக்களத்தால் வழங்கப்படும் ஆலோசனைகள் தொடர்பாக மிக அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அதிக மழை வீழ்ச்சி காணப்படும் சாத்தியங்கள்

மேலும் காங்கேசன் துறை, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாந்தோட்டை வரையிலான கரையோர பகுதிகளில் பலத்த இடியுடன் மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகிறது.

காற்றின் வேகம்

அத்தோடு நாட்டில் சூழவுள்ள காற்றானது வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் இருந்தது மணித்தியாலத்திற்கு 30 அல்லது 40 கிலோ மீட்டர் வேகம் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மன்னாறிலிருந்தும் காங்கேசன்துறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக கரையோரங்களுக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணித்தியாளத்திற்கு 55 தொடக்கம் 65 கிலோ மீட்டர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம்காணப்படுகிறது.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்