வெளிநாட்டிற்கு சுற்றுலா விசாவில் பணியாளர்களை அனுப்பிய 400 நிறுவனங்களுக்கு உரிமம் ரத்து
வெளிநாட்டுக்கு சுற்றுலா விசாவில் அனுப்பி, அது தொடர்பான தகவல்கள் அனைத்தையும் சமர்ப்பிக்க தவறிய 400 வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட உள்ளதாக தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
தொழில் மற்றும் வெளிநாட்டு அமைச்சின் விவகாரங்கள் தொடர்பில் வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
உண்டியல் முறையில் டாலரை அனுப்பும் விடையும் தொடர்பாக
நாட்டுக்கு அனுப்பப்படும் டாலரை உண்டியல் முறை மூலம் பெற்றுக்கொண்டு உரிமையாளர்களுக்கு வழங்கும் நிறுவனங்களுக்கும் இடைக்கால தடைகளை விதிக்கப்பட்டுள்ளதாக மேலும் கூறினார்.
வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களின் கட்டணங்கள் அதிகரிப்பு
வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்காக அனுப்பப்படும் முகவர்களின் அனுமதி பத்திரத்திற்கான கட்டணமும் அதிகரிக்கப்பட உள்ளதாகவும் மேலும் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார கூறினார்
Tags:
srilanka



