தற்போது இந்த சிறுவன் கிணற்றில் 55 அடி ஆழத்தில் இருப்பதாகவும் சிறுவனின் மேல் சகதி அதிகமாக இருப்பதால் சிறுவனின் நிலைமையை அறிய முடியாமல் இருக்கிறதாகவும் தொடர்ந்து சிறுவனுக்கு ஆக்ஸிஜன் வழங்கப்பட்டு வருவதாகவும் இந்த சிறுவன் மூன்று நாட்கள் கிணற்றில் தொடர்ந்து இருப்பதால் இரவு நேரங்களில் சிறுவன் பயப்படாமல் இருப்பதற்காக கிணற்றுக்குள் ஒளிபரச்சல் செய்யப்பட்டு உள்ளது.
கிணற்றுக்குள் விழுந்த சிறுவன்
வீட்டுக்கு வெளியே விளையாடி கொண்டிருந்த சிறுவன் காணவில்லை என்று தாய் தேடி பார்க்கும்போது சிறுவனை காணவில்லை என்பதால் பதறிப்போன தாய் அருகில் உள்ள ஆழ்துளை கிணற்றில் தான் விழுந்திருக்க வேண்டும் என்று அக்கம் பக்கத்தினர்களிடம் கதறி அழுதபோது அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கும் மீட்பு பணியாளர்களுக்கும் தகவலை கொடுத்தனர் சிறிது நேரத்தில் மீட்பு பணியினர் அங்கு வருகை தந்து சிறுவனை மீட்பதற்கான தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.



