முச்சக்கர வண்டியும் புகையிரதமும் மோதியதில் ரஷ்யா பெண்மணி உயிர் இழப்பு
முச்சக்கர வண்டியும் புகையிரதமும் மோதியதில் அதில் பயணித்த ரஷ்யா பிரஜை உட்பட இருவர் உயிரிழந்த உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலி, ஹபராதுவ பிரதேசத்தில் இன்று காலை தலவெல்ல, மஹயம்ப அருகில் உள்ள புகையிறத கடவையில் முச்சக்கர வண்டியும் புகையிரதமும் மோதியதில் ரஷ்யா பிரஜையான பெண்மணி ஒருவரும் முச்சக்கர வண்டியின் சாரதியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
Ads
இந்த விபத்து நடப்பதற்கு முன்பு புகையிறத கேட் இயங்காமல் இருப்பதை முச்சக்கர வண்டி சாரதிக்கு சமிக்கை காட்சிப்படுத்தியிருந்த போதிலும் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Tags:
srilanka



