யாழ்ப்பாணத்தில் புகையிரதத்துடன் பேருந்து மோதி பாரிய விபத்து
யாழ்ப்பாணம் அரியாலை ஏவி வீதியில் காங்கேசன்துறை நோக்கி சென்றுகொண்டிருந்த புகையிரத வண்டியுடன் பேருந்து மோதி விபத்துக்குள்ளாகியதில் பேருந்தின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து இன்று நண்பகல் ஒரு மணி அளவில் இடம்பெற்றுள்ளதாகவும் இந்த வீதியில் புகையிரத பாதுகாப்பற்ற தடவை இல்லாமையினால் காங்கேசன்துறை நோக்கி சென்றுகொண்டிருந்த புகையிரத வண்டியுடன் பேருந்து மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும்.
இந்த விபத்தின் போது சம்பவ இடத்தில் பேருந்தின் சாரதி உயிரிழந்ததை அடுத்து அந்த இடத்தில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Ads
இவ்வாறான விபத்துக்கள் ஏற்படுவதற்கு காரணமாக இருப்பது இந்த வீதியில் புகையிரத பாதுகாப்பு கடவை காணப்படாததால் இப்பகுதியில் அதிகமான விபத்துகள் ஏற்படுவதாக அப்பகுதியை சேர்ந்த மக்கள் தெரிவித்து வருகிறார்கள்.



