பாடசாலை விடுமுறை தொடர்பான கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு


 பாடசாலை விடுமுறை தொடர்பான கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

நாளைய தினம் (12-12-2022) பாடசாலை திறப்பது தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது

இது தொடர்பாக நாளை பாடசாலை திறப்பது  தொடர்பில் இதுவரை தீர்மானம் எடுக்கவில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான கலந்துரையாடல்

வளிமண்டல திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஆகியவற்றுடன் பாடசாலையை திறப்பது தொடர்பில் இன்று(11-12-2022) விசேட கலந்து உரையாடல் ஒன்று ஈடுபட உள்ளதாக கல்வி அமைச்சர் செயலாளர் நிஹால் ரணசிங்க தெரிவித்தார்.

தற்போது நிலவும் காலநிலை காரணத்தால் கடந்த வெள்ளிக்கிழமை அரச மற்றும் அரச அனுமதி பெற்ற பாடசாலைகள் மற்றும் கத்தோலிக்க பாடசாலைக்கு சிறப்பு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆகையால் நாளை பாடசாலை திறப்பது தொடர்பில் இன்றைய கலந்துரையாடலுக்கு பின்னரே தீர்மானம் எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு எங்கே கிளிக் செய்யுங்கள்


புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்