சூறாவளி ஏற்படும் அபாயம் இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை

 சூறாவளி ஏற்படும் அபாயம் இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை


எதிர்வரும் 16ஆம் தேதி தொடக்கம் 22 ஆம் திகதி வரை இலங்கைக்கு சூறாவளி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணா நாயக்க தெரிவித்துள்ளார்.

மேற்குறிப்பிட்ட நாட்களில் மழை அல்லது சூறாவளி ஏற்படுமா என்பதை உறுதிப்படுத்தவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் எதிர்வரும் 16ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை அந்தமான் தீவை சூழவுள்ள நிலைமை தற்போதும் காணப்படுவதாகவும் ஆகையால் இந்தக் காற்றழுத்த தாழ்வு நிலை சிறிது வளர்ச்சியடைந்து வருவதாகவும். இதுவே சூறாவளியாக மாறி இலங்கையை பாதிக்குமா என்பதை பற்றி இன்னும் உறுதி செய்யப்படவில்லை இருந்த போதும் அவ்வாறான நிலைமை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக பணியாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

எனினும் வளிமண்டலையால் அமைப்பு மற்றும் வழித்தடத்தில் இருக்கும் நீராவியின் அளவைப் பொறுத்தே அமையும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சமீப காலத்தில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள திடீர் சூறாவளியின் தோற்றம் ஏற்பட்டது. இந்த சூறாவளியானது திருகோணமலையிலிருந்து வடகிழக்கு திசையில் சுமார் 370 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தமையால் நாடு முழுவதும் சீரற்ற காலநிலை நிலவியவை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு எங்கே கிளிக் செய்யுங்கள்

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்