யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைக்கான விமான சேவைகள் 2019 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டிருந்த போதும் அக்கால கட்டத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக இரு நாடுகளுக்கு இடையிலான விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.
மீண்டும் இந்த சேவையானது இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது. இதன்படி சென்னை விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு பயணிகளை ஏற்றிச் செல்லும் விமானம் ஆனது இன்று காலை 10. 50 அளவில் விமான நிலையத்தை வந்தடையவுள்ளது.
விமான சேவைகள் நேர அட்டவணை
இன்று யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும் அலையன்ஸ் ஏயார் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் முற்பகல் 10.50 மணியளவில் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும் மீண்டும் திங்கள் செவ்வாய் கிழமைகளில் விமானம் வந்தடைந்து பின்னர் ஒரு மணித்தியாலத்திற்கு பின்பு மீண்டும் 11:50க்கு மீண்டும் சென்னைக்கு புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றும் இரு நாடுகளுக்கான விமான சேவை வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இனி சென்னை யாழ்ப்பாணத்திற்கான பயணங்களை மேற்கொள் வருவதற்கு இந்த விமான சேவையானது மிகவும் பயன் தரும் வகையில் இருக்கும்.



