பிரித்தானியாவில் சிறுவர்கள் மத்தியில் தீவிரமாக பரவி வரும் கொடிய வைரஸ் தொற்று!


tamillk news

பிரித்தானியாவில் சிறுவர்கள் மத்தியில் தீவிரவாக பரவி வரும் பாக்டீரியா Strep A என்ற வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில்  சிறுவர்களின் பள்ளிகளில் இந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாகவும் இதுவரைக்கும் இந்த வைரஸால் 16 மரணங்களும் பதிவாகியுள்ளது.

தற்போது Strep A வைரஸ் பரவலால் மருத்துவமனைக்கு பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளுடன் செல்வதால் மருத்துவமனை முழுவதும் இடப்பற்றாக்குறை ஏற்படுவதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இங்கிலாந்தில் உள்ள உள்ளூர் மருந்தாகத்தில் நோய் தொற்றுக்கான சிகிச்சை அளிப்பதற்கான நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பற்றாக்குறையால் போராடி கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மருத்துவமனையிலும் போதிய இடவசதி இல்லாமையால் மக்கள் குழந்தைகளை நேரடியாக மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பு 111 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு உரிய சிகிச்சைகள் தொடர்பில் அறிவித்தல்களை பெற்று அதன்படி செயல்படுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகளுக்கு எங்கே கிளிக் செய்யுங்கள்


புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்