வவுனியா பல்கலைக்கழக ஆசிரியர்கள் இன்று அடையாள பகிஷ்கரிப்பு


tamillk news

இன்று வவுனியா பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் அடையாள பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் ஆசிரியர் சங்கத்தினர்கள் தங்கள் கருத்தினை மேலும் தெரிவிக்கையில்.

அரசாங்கத்தின் வரவு செலவு திட்டம் மற்றும் உள்நாட்டு இறைவரி சட்டம் ஆகியோவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த அடையாள பகிஷ்கரிப்பு இலங்கை முழுவதும் உள்ள பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் மேற்கொள்ளப்படுகிறதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டம் மற்றும் உள்நாட்டு இறைவரி ஆகியவை மக்களுக்கும் தொழில்  நிறுவனங்களுக்கும் ஏற்ற வகையில் இல்லை என்பதால் உடனடியாக அரசாங்கம்  மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் இதன் மூலமாக மக்களுக்கும் தொழில் நிறுவனங்களுக்கும் நன்மை அடையும் வகையில் இவை அமைய வேண்டும் என்றும் தெரிவித்தனர். 

மேலும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தினர் தெரிவிக்கையில் இன்று இடம்பெறும் அடையாள பகிஷ்கரிப்பு ஆசிரியர்கள் பல்கலைக்கழக நடவடிக்கையில் மாத்திரம் விலகி இருக்கிறார்கள் ஆனால் மாணவர்களுக்கு பரீட்சைகள் தொடர்பான எந்தவொரு இடையூறுகளும் ஏற்படாது என்று தெரிவித்தார்கள்.


புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்