அமெரிக்காவில் தலைமுறை காணாத பனிப்புயல் காணப்படும் காரணத்தால் அமெரிக்காவின் வெப்பநிலை தற்போது 40 டிகிரி செல்சியஸ் வரை வீழ்ச்சி அடைந்துள்ளது என கணிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
கடும் பனிப்பொழிவுகள் கடுமையான காற்றும் வீசுவதால் பல பயணங்கள் தடை செய்யப்பட்டு வருகிறது அதில் விமான போக்குவரத்துக்கள் ஆயிரத்துக்கும் அதிகமான பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பனிப்புயல் எச்சரிக்கை
இந்த நிலையில் பனிப்புயல் குறித்து காலநிலை அவதானிப்பு நிலையம் மில்லியன் கணக்கான மக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது இதில் வெளியில் செல்பவர்கள் சில நிமிடங்களில் குறைவதற்கு முகம் கொடுக்க நேரிடும் என்று எச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பல அதிவேகப் பாதைகள் பனியில் மூடப்பட்டு இருப்பதால் பாதைகள் சறுக்கும் தன்மை காணப்படுவதால் பயணிப்பது மிகவும் ஆபத்தானது என அமெரிக்கா போக்குவரத்து சங்கம் எச்சரித்துள்ளது.



