இன்று 25டி முற்பகல் கண்டி அலவத்துகெடை பொலிஸ் பிரிவில் துனுவில பிரதேசத்தில் வீடொன்றின் மண்மேடுடன் பாறை ஒன்று சரிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேர் பலியாகினர்
இந்த சம்பவத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, தாய், மற்றும் 3 பிள்ளைகள் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் ஆண்(18) பிள்ளை ஒன்றும் பெண்(16) பிள்ளை ஒன்றும் மரணமடைந்துள்ளனர்
காயமடைந்த மற்றொரு பெண் பிள்ளை ஒருவரை மேலதிக சிகிச்சைக்காக பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மண் சரிவு எச்சரிக்கை
தற்போது நாடளாவிய ரீதியில் கடும் மழை வானிலை காணப்படுவதால் பல பகுதிகளில் மண் சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Tags:
srilanka



