இந்தியாவில் ஆந்திரா மாநிலத்தில் தாடேப்பள்ளி என்னும் பகுதியில் இந்த கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த சரண் என்பவர் கடந்த 2015 ஆம் ஆண்டு பெண் ஒருவரை காதலித்து வந்த நிலையில் இவரின் காதலுக்கு பெற்றோரினால் எந்த விதமான எதிர்ப்புகளையும் தெரிவிக்கவில்லை என்பதால் பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள்.
திருமணம் முடிந்து சில ஆண்டுகள் வரை இவர்கள் நன்றாக வாழ்ந்தார்கள் பின்னர் இவர்களுக்கு இடையே சண்டைகள் ஏற்படத் தொடங்கியது பின்னர் இவர் காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவியை துன்புறுத்தி அடிக்க தொடங்கினார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அந்த பெண் தான் பலவீனமாக இருப்பதை உணர தொடங்கியதும் இது ஏதாவது ஒரு சின்ன மருத்துவ பாதிப்பாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டு இருந்தபோது வழக்கமாக மருத்துவமனை பரிசோதனைக்கு சென்றபோது அப்போதும் நடத்தப்பட்ட பரிசோதனையில் இந்தப் பெண்ணுக்கு எச்ஐவி இருப்பதை கண்டறியப்பட்டது இது தொடர்பாக அந்த பெண் அதிர்ச்சி அடைந்து விட்டார்.
மேலும் இந்த எச்ஐவி நோய் எப்படி எனக்கு வந்திருக்கும் என்று தெரியாமல் குழப்பத்துக்கு உள்ளாகினார்.
தனக்கு இந்த நோய் எப்படி வந்திருக்கும் என்று இவர் ஆராயும் போது சில மாதங்களுக்கு முன்பு இவர் கர்ப்பமாகியுள்ளார் அந்த தருணத்தில் இருந்து கணவர் தனக்கு ஆண் குழந்தை வேண்டும் என்று இவரிடம் அடிக்கடி சொல்லி உள்ளார் இருந்த போதும் பரிசோதனையில் இந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை இல்லை என்பதை கணவர் அறிந்து கொண்டார் இதனால் கோபமடைந்த கணவர் தனது மனைவியை அப்பகுதியில் இருக்கும் மருத்துவம் பார்க்கும் பாட்டி ஒருவரிடம் அழைத்து சென்று தனது மனைவிக்கு எச்ஐவி ஊசி போட்டு உள்ளார். அவ்வேளை இந்த பெண் எதுக்கு இந்த ஊசி என்று கேட்டபோது இது ஒரு நிறைய சத்துக்கள் கொண்ட ஊசி என்று சொல்லி உள்ளார்கள்.
கணவர் இப்படி செய்வதற்கு காரணம்
கணவருக்கு 21 வயது கொண்ட பெண் ஒருவருடன் தொடர்பு இருப்பதால் இவரை விவாகரத்து செய்வதற்கு இந்த திட்டத்தில் திட்டி உள்ளார் தனது மனைவிக்கு எச்ஐவி உள்ளதாக கூறி விவாகரத்து பெறுவதற்காக இந்த திட்டத்தை திட்டி உள்ளதாக தெரியவந்துள்ளது.
மனைவி போலீசாரிடம் புகார்
இந்த நிலையில் தனது கணவர் மீது அப்பகுதியில் இருக்கும் போலீஸ் நிலையத்தில் புகார் செய்ததை அடுத்து சரனை போலீசார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்



