பாகிஸ்தான் பள்ளிவாசலில் குண்டு வெடிப்பில் 32 பேர் பலி, 150 பேர் காயம்!


பாகிஸ்தான் பள்ளிவாசலில் இன்று நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் குறைந்தபட்சம் 32 பேர் பலியானதுடன் மேலும் 150 பேர் காயமடைந்துள்ளனர்.

பெஷாவர் நகரில் உள்ள காவல்துறை தலைமையகத்தின் பள்ளிவாசலுக்குள் பிற்பகல்  தொழுகையின்போது இந்த குண்டுவெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குண்டுவெடிப்பினால் பள்ளிவாசலின் கூரையும் மற்றும் சுவரின் ஒரு பகுதியில் இடிந்து விழுந்தது.

பள்ளிவாசலுக்குள் இன்னும் சில சிக்கியுள்ளனர் எனவும், இவர்களை மீட்பதற்காக கனரக இயந்திரங்களைக் கொண்டு இடிபாடுகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் பெஷாவரிலுள்ள வைத்தியசாலைகளில் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளன என காவல்துறை ஆணையாளர் ரியாஸ் மெஷுத் தெரிவித்துள்ளார்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்