முட்டைகளை அதிக விலைகள் விற்பனை செய்த 6 வர்த்தக நிலையங்களுக்கு அபராதம்



முட்டைகளை அறிய விலைக்கு விற்பனை செய்யக் கூடாது எனவும் வர்த்தகமானியில் அறிவித்திருந்த நிலையில்

 வர்த்தமானி அறிவித்தலையும் மீறி அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்த 6 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக நீதிமன்றத்தினால் அவதாரம் விதிக்கப்பட்டது.

கம்பஹா நுகர்வோர் அதிகார சபையினால் கிரிபத்கொடை, களனி,மாகொல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்புகளில் அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்த ஐந்து வர்த்தக நிலையங்களுக்கு மஹர நீதான் நீதிமன்றம் ஒரு லட்சம் ரூபாய் அவதாரம் விதித்து உத்தரவிட்டது.

இதன்போது வர்த்தக உரிமையாளர் ஒருவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமையால் குறிப்பிட்ட சந்தேகநபரை கைது செய்வதற்கு நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று முட்டைகளை அதிக விலைக்கு விற்பனை செய்த மற்றொரு வர்த்தக நிலையமான தனமல்வில பகுதியில் சுற்றி வளைக்கப்பட்ட போது குறித்த வர்த்தக நிலையத்திற்கு வெல்லவாய நீதிமன்றம் ஒரு லட்சம் ரூபாய் அபதாரம் விதித்து தீர்ப்பளித்தது.

முட்டைகளை காட்டுப்பாட்டு விலையில் விற்பதற்காக முட்டை விலை அதிகார சபை புதிய வர்த்தமானி அண்மையில் வெளியிடப்பட்டது அதில் வெள்ளை முட்டை ஒன்றில் அதிகபட்ச விலை 44 ரூபாய் சிவப்பு முட்டை ஒன்றின் விலை அதிகபட்ச சில்லறை விலையாக 46 ரூபாவாகவும் காணப்பட்டது.

இந்த நிலையில் கட்டுப்பாட்டு விளையும் மீறி அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களை அண்மைகாலமாக நுகர்வோர் அதிகார சபையினர் சுற்றி வளைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்