கையடக்க தொலைபேசிகளை வாங்குபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நாட்டில் சட்ட விரோதமான கையடக்க தொலைபேசிகளை இறக்குமதி செய்ய தடை செய்வதற்காக உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என ராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்ய தெரிவித்துள்ளார்.

tamillk.com

இவ்வாறு சட்ட விரோதமாக இறக்குமதி  செய்யப்படுவதால் நாட்டுக்கு பெருமளவான வரி வருமானத்தை இழந்து வருவதாகவும்  அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்களுடன் இன்று(31) இடம் பெற்ற விசேட கலந்துரையாடலில் இராஜாங்க அமைச்சர் இவ்விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டுக்குள் சட்டபூர்வமாக இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து அனைத்து கையடக்க தொலைபேசிகளின் IMEI எண்களும் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும்..

இதன்போது தவறான முறையிலோ அல்லது சட்ட விரோதமாகவோ செயல்பட்டால் இந்த எண்ணைப் பயன்படுத்தி அடையாளம் காண முடியும்.

இந்த நிலையில் சட்ட விரோதமாக இறக்குமதி செய்யப்படும் கையடக்க தொலைபேசிகள் அவ்வாறு பதிவுகள் செய்யப்படுவதில்லை.

நாட்டுக்குள் சட்டபூர்வமாக இறக்குமதி செய்யப்படும் அனைத்து கையடக்க தொலைபேசிகளும் பாதுகாப்பாக உள்ளதா என சரிபார்க்கப்படுகிறது.

இதன் போது சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படும் கையடக்க தொலைபேசிகள் தொடர்பாக ஆராய்ந்த ராஜங்க அமைச்சர் இது தொடர்பில் தற்போதுள்ள சட்டங்களை கடுமையாகுமாறு சுங்கத் திணைக்களத்துக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும் இது தொடர்பான அறிக்கைகளை எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் வழங்குமாறு கோரியுள்ள  ராஜாங்க அமைச்சர், சட்டவிராத இறக்குமதியை தடுக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வர்த்தக மற்றும் முதலீட்டுக் கொள்கை திணைக்களத்துக்கு பணிபுரி விடுத்துள்ளார்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்