கருப்பினத்தை சேர்ந்த இளைஞன் தாக்கப்பட்டு உயிரிழந்தமை தொடர்பாக 5 பொலிஸ்: அதிகாரிகள் மீதான கொலைக்குற்றச்சாட்டு


அமெரிக்காவில் டென்னஸ் மாநிலத்தில் கறுப்பின இளைஞர் ஒருவரை தாக்கி உயிரிழந்தமை தொடர்பில் 5 பொலிஸ் அதிகாரிகள் மீது கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கருப்பின இளைஞரான 29 வயதுடைய டயர் நிக்கலஸ் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகள் ஐவரும் கருப்பினத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவமானது கடந்த 7 திகதி டென்னஸ் மாநிலத்தில் உயிரிழந்த இளைஞனான டயர் நிக்கலஸ் வாகனத்தை ஒழுங்கீனமான முறையில் செலுத்தியதால் சந்தேகத்தில் கைது கைது செய்யப்பட்டிருந்தார்.

இதன் பின்பு கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 10-ம் திகதி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தை அடுத்து சம்பந்தப்பட்ட ஐந்து பொலிஸ் அதிகாரிகளும் உடனடியாக பணியிலிருந்து நீக்கப்பட்டனர்.

இவ்வாறான சம்பவம் ஒன்று 2020 மே மாதம் ஜோர்ஜ் ஜோளோய்ட் என்னும் இளைஞர் வெள்ளையின பொலிஸ் அதிகாரிகளினால் முழங்காலினால் மிதித்து கொலை செய்யப்பட்டதை அமெரிக்காவில் பெரும் ஆர்ப்பாட்டம் வன்முறைகளும் இடம் பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் டயர் நிக்கலஸ் கைது செய்யப்பட்ட போது பதிவான வீடியோ காட்சிகளும் வெளியாகிய நிலையில் மக்கள் ஆத்திரம் அடையக்கூடும் என கருதப்படுகிறது. இவ்விடத்தை கட்டுப்படுத்துவது அமெரிக்கா ஜனாதிபதியான ஜோ பைடன் மக்களிடம் அமைதியான முறையில் எதிர்ப்பை வெளிப்படுத்துமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்