கிழக்கு கரையோரத்தை வந்தடையுள்ள காற்றழுத்தம்: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!


tamillk

தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று காலை உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு- வடக்கு திசையில் நகரம் வாய்ப்பு அதிகமாக காணப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் நாளை 28 திகதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றமுத தாழ்வு மண்டலமாக வலுவடைந்து பின்னர் அது படிப்படியாக மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்வதோடு எதிர்வரும் முதலாம் திகதி கிழக்கு கரையை அடையக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் காற்றின் வேகமானது மணிக்கு 40 தொடக்கம் 45 கிலோமீட்டர் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இதன்போது கடல் பரப்புக்கு மேல் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதோடு கடலும் கொந்தளிப்பாக இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்