போதைப்பொருளுடன் கம்பஹா வைத்தியசாலையின் அம்பியூலன்ஸ் சாரதி கைது!



ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்தமை குற்றச்சாட்டில் கம்பஹா பொது வைத்தியசாலையில் அம்பியூலன்ஸ் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைப்பொருளுடன் யாகொட பிரதேசத்தில் வைத்து மினுவங்கொடை பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட அம்பியூலன்ஸ் சாரதி சீதுவ ரத்தொலுகம கொடுகுடா பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர்.

மேலும் இவர் நீண்டகாலமாக ஹெரோயின் போதை பொருளுக்கு அடிமையாகி உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதன் போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில் மினுவங்கொடை பொலிஸ் உப பொலிஸ் பரிசோதகர் கருணாரத்னவினால் குறித்த சாரதி சோதனை செய்தபோது யாகொடமுல்ல வைத்து போதைப் பொருள்களுடன் கைது செய்யப்பட்டார்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்