வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழிபட்ட வரித் திருத்தங்களுக்கு உட்பட்ட பல தீர்மானங்கள் இன்று முதல் அமுலுக்கு வருகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அமைய இன்று முதல் அமுலுக்கு வரும் மாதாந்த தனிநபர் வருமான வரி விதிக்கப்படுகிறது.
மாதாந்த சம்பளத்துக்கு ஏற்ற வரி
இதன்படி மாதத்துக்கு 150,000 சம்பளம் பெருவர்களுக்கு மாதாந்த வாரியாக 3500 ரூபா அறவிடப்படும், இதேபோன்று மாதாந்த சம்பளம் 2 லட்சம் ரூபாய்க்கு மாதாந்த வாரியாக 10,500 ரூபாவாகவும். 250,000 பெரும் நபருக்கு 21,000 ரூபாயும் மற்றும் 300,000 ரூபாய் சம்பளமாக பெரும் நபருக்கு 35,000 ரூபாய் வரி செலுத்த வேண்டி வரும்.
மேலும் 350,000 சம்பளத்துக்கு 52,500 ரூபாய் வரியாகவும், 4 லட்சம் சம்பளம் பெறும் நபருக்கு 70,500 ரூபாய் வரியாகவும், 5 லட்சம் சம்பளத்துக்கு 106,500 ரூபாய் வரியை செலுத்த வேண்டும்.
மேலும் வரியாக 750,000 சம்பளம் பெரும் நபர் மாதாந்த வரியாக 196,500 செலுத்த வேண்டும். 10 லட்சம் சம்பளம் பெறும் நபரிடம் வரித் தொகையாக 286,500 ரூபாய் தொகை ஆகும்.
இவ்வாறாக இன்று முதல் அமுலுக்கு வர இருக்கும் தனி நபர் வருமான வரியில் ஒரு லட்சம் ரூபாய் வரை சம்பளம் பெறுபவர்களுக்கு அறவிடப்பாடது என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாறான வருமான வரியில் சில திருத்தங்கள் இருக்கும் எனவும் அது தரமான பொருட்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதி, விவசாய செயலாக்கம், கல்வி சுற்றுலா, கட்டுமானம் மற்றும் சுகாதார சேவை துறைகளுக்கு 30 சதவீதமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



