வவுனியாவில் சிறுதொழில் முயற்சியாளர்களுக்கான சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் முகமாக வட மாகாண தொழில்துறைத் திணைக்களம் ILO LEED செயல்திட்டத்தின் நிதி அனுசரையுடன் மாபெரும் வர்த்தக சந்தை என்று ஆரம்பமானது.
மேலும் இந்த வர்த்தக சந்தையில் நெசவுத்தொழில் உற்பத்தியாளர்களின் உற்பத்தி பொருட்கள் மற்றும் ஆடை உற்பத்தி பொருட்கள் அடங்கிய 50 க்கு மேலான கூடாரங்கள் அமைக்கப்பட்டு விற்பனை பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
இந்த வர்த்தக சந்தைக்கு வவுனியாவில் இருந்து பெரும்பாலான மக்கள் வருகை தந்து அதிக அளவான பொருட்களையும் கொள்ளளவு செய்து கொண்டிருந்தமை காணக்கூடியதாக இருந்தது.
இவ்வாறு அமைக்கப்பட்டிருந்த வர்த்தக சந்தையானது 26 தொடக்கம் 27 வரை இரண்டு நாட்கள் காலை 9 மணி தொடக்கம் மாலை 7:30 மணி வரை இடம் பெறும் என குறிப்பிடத்தக்கது.
Tags:
Vavuniya news
































