புதையல் தோண்டுவதற்கு வேனில் பயணித்துக் கொண்டிருந்த எட்டு பேர் நேற்றைய(27) தினம் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இந்த சம்பவமானது கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்பாரு பிரதேசத்தில் இராணுவத்தினரின் வீதி தடையில் சோதனைகள் முற்பட்டபோது வேன் ஒன்று சோதனை செய்தபோது புதையல் தோன்றுவதற்கான நிலையில் காணப்பட்டதால் சந்தேக நபர்கள் அனைவரையும் கைது செய்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 21 முதல் 47 வயதுக்கு உட்பட்டவர்களாக காணப்படுவதாகவும் இவர்கள் மொரட்டுவ, பதவிய, கல்கிஸ்ஸ,பிலிமத்தலாவ,உடபுஸ்ஸல்வ, கரந்தெனிய, மற்றும் வவுனியா பிரதேசத்தை சேர்ந்தவர்கள் ஆவார்.
சந்தேக நபர்களை திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதோடு கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு விசாரணைகளை முன்னெடுத்து வருகிறார்கள்.
Tags:
இலங்கை செய்திகள்



