எதிர்வரும் மார்ச் மாதம் திட்டமிட்டபடி தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்த தேர்தல் ஆணைக்குழுவிற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்துவது தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே உயர்நீதிமன்றத்தால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தேர்தலை இடைநிறுத்த மனு தாக்கல்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இடைநிறுத்த உத்தரவிடுமாறு ஓய்வு பெற்ற இராணுவ கேணல் எம்.ஆர். விஜேசுந்தரவினால் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தரவிட கோரி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் எதிர்கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனு தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Tags:
srilanka



