சிறிய அளவிலான நில அதிர்வு ஒன்று பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி மொனராகலை -வெல்லவாய, புத்தலையில் 3 மெக்னிட்யூட் அளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நில அதிர்வானது இன்று நண்பர்கள் 12:11 மணியளவில் பதிவானதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியாகம் தெரிவித்துள்ளது.
நில அதிர்வுகளை பல்லேகல,மஹகனதரவ மற்றும் ஹக்மன ஆகிய இடங்களில் அமைந்துள்ள நில அதிர்வு அளவை நிலையங்களில் மேற்கொண்டவாறு நில அதிர்வுகளை பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் அமெரிக்கா புவியியல் ஆய்வு நிலையத்தின் தகவல்களின்படி, இந்தியா பெருங்கடலில் இரண்டு அதிர்வுகள் பதிவாகியுள்ளன தெரிவிக்கப்பட்டுள்ளது.



